shadow

‘நாடா’ புயலை அடுத்து புதிய காற்றழுத்த தாழ்வு. மீண்டும் ஒரு புயலா?

cyclone in andhra pradesh‘நாடா’ புயல் இன்று அதிகாலை நாகை அருகே வலுவிழந்து கரையை கடந்தது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, கேரளப் பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் , தென்கிழக்கு வங்காளவிரிகுடாவில் நாளை மறுநாள் அதாவது டிசம்பர் 4ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த புதிய காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறுமா? என்பது குறித்து விரைவில் தெரிய வரும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply