ரஜினியின் ‘காலா’வில் மேலும் ஒரு பாலிவுட் நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘காலா’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் பாலிவுட் நடிகர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், மற்றொரு முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் நானாபடேகரும் நடித்து வரும் நிலையில் தற்போது இன்னொரு பாலிவுட் நடிகரான பங்கஜ் திரிபாதி இந்த படத்தில் இணைந்துள்ளார். இவர் இந்த படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்கவுள்ளாராம்

தனது கேரக்டர் குறித்தும் ரஜினியுடன் நடிப்பது குறித்து பங்கஜ் கூறியதாவது: இந்த படத்தில் நான் போலீஸ் கேரக்டரில் நடிக்கின்றேன். சிலசமயம் என்னுடைய போலீஸ் கேரக்டர் வில்லன் போல் ஆடியன்ஸ்களுக்கு தெரிந்தாலும், என்னுடைய கேரக்டர் நெகட்டிவ் கேரக்டர் அல்ல. இந்த கேரக்டரை நிச்சயம் ரசிகர்கள் ஏற்று கொள்வார்கள். மேலும் நான் இதுவரை ரஜினியின் ஒரு படத்தை கூட முழுதாக பார்த்ததில்லை என்றும் ‘ரோபோ’ படத்தின் ஒருசில காட்சிகளை மட்டுமே பார்த்துள்ளேன். அவரது எளிமை, திரைக்கு வெளியே நடிக்காமல் இருக்கும் அவரது குணம் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *