ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 101வது அறிவியல் மாநாடு தற்போது நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மன்மோகன்சிங் தமிழ்நாட்டில் ரூ.1,450 கோடியில் அணு ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

அறிவியல் ஆராய்ச்சி மேம்பாட்டுக்காக ரூ.9ஆயிரம் கோடி செலவில் பல்வேறு திட்டங்கள் வரும் காலங்களில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் ரூ.1,450 கோடி செலவில் அணு ஆராய்ச்சி நிலையம் ஒன்று விரைவில் அமைக்கப்படும். இந்த ஆராய்ச்சி நிலையம் நியூட்ரான் மற்றும் புரோட்டான்களுக்கு இடையே ஏற்படும் செயல்களை பற்றி ஆராய்ச்சி செய்யும் என்று பிரதமர் கூறினார்.

ஏற்கனவே கூடங்குளம் அணுநிலையத்திற்கே எதிர்ப்பு வந்துகொண்டிருக்கும் நிலையில் பிரதமர் மற்றொரு அணு ஆராய்ச்சி நிலையம் அமைக்க திட்டமிட்டு இருப்பதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply