shadow

மீண்டும் இணையவுள்ள பிரபுதேவா-தமன்னா ஜோடி

இயக்குனர் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடித்த ‘தேவி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இதே ராசியான ஜோடி மீண்டும் இணையவுள்ளது. ஆனால் இவர்கள் இணையவுள்ளது திரைப்படத்தில் அல்ல, ஐபிஎல் தொடக்க நிகழ்ச்சியில் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் தொடக்க விழா இன்று மும்பையில் பிரமாண்டமாக நடைபெறவுள்ள நிலையில் இந்த விழாவில் ஹிருத்திக் ரோஷன், ரிஷி தவான் ஆகியோரும், நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், ப்ரினீதி சோப்ரா உள்பட பல முன்னணி நடிகைகள் நடனம் ஆடவுள்ளனர்

இந்த நிலையில் இவர்களுடன் தற்போது பிரபுதேவா, தமன்னா இணைந்து ஒரு நடனம் ஆடவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Leave a Reply