shadow

17 காற்றாலை மூலம் வரும் மின்சார உற்பத்தி பெருமளவு குறைந்துள்ளதால் தமிழகம் முழுவதும் மின்வெட்டு நாள் ஒன்றுக்கு ஒருமணி நேரம் அமலுக்கு வந்துள்ளது. சென்னையிலும் சில பகுதிய்களில் மின்வெட்டு அமலாகும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து மின் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தற்போது காற்றாலை மின்சார உற்பத்தியின் அளவு மிகவும் குறைந்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி, 7,140 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட காற்றாலைகளில், வெறும் 20 மெகாவாட் மட்டுமே உற்பத்தியானது. புதன் நள்ளிரவில் வெறும் 14 மெகாவாட் தான் கிடைத்தது.

இதேபோல் மேட்டூர் புதிய மின் நிலையத்தில் இயந்திரக் கோளாறு காரணமாக 600 மெகாவாட் உற்பத்தியும், எண்ணூர் மின் நிலையத்தின் மூன்று அலகுகளில் 280 மெகாவாட், ஆந்திராவிலுள்ள ராமகுண்டம் மின் நிலையத்தில் 500 மெகாவாட், கர்நாடகா கைகா அணு மின் நிலையத்தில் 220 மெகாவாட் உற்பத்தி பாதித்துள்ளது. இது நீண்ட கால பிரச்சினையல்ல. வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சரி செய்யப்படும்.

Leave a Reply