shadow
kombanமெட்ராஸ் படத்தின் வெற்றியை அடுத்து கார்த்தி நடித்த ‘கொம்பன்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி ரிலீஸாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த படம் ஒரு வாரத்திற்கு முன்பே அதாவது மார்ச் 27ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

ஏப்ரல் 2ஆம் தேதி கமல்ஹாசனின் ‘உத்தம வில்லன், உதயநிதியின் ‘நண்பேண்டா’ ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆவதால் கொம்பன் ரிலீஸ் தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொம்பன் திரைப்படத்திற்காக தற்போதைய நிலவரப்படி 400 தியேட்டர்கள் புக் ஆகியிருப்பதாகவும், இன்னும் அதிக தியேட்டர்கள் புக் ஆக வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன,.

கார்த்தி- லட்சுமி மேனன் முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ள இந்த படத்தில், ராஜ்கிரண், கோவை சரளா, கருணாஸ், தம்பி ராமையா உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைபடத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை முத்தையா இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் ஒத்திவைக்கப்படலாம் என்று கருதப்படுகிறது. மார்ச் 29ஆம் தேதி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி நடைபெறவுள்ளதாகவும், இந்த இறுதிப்போட்டிக்கு ஒருவேளை இந்திய அணி தேர்வு செய்யப்பட்டால், படத்தின் வசூல் பெருமளவு பாதிக்கும் என்பதால் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் ஒருமுறை ஒத்திவைக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply