மீண்டும் ஒரே நாளில் அஜித்-விஜய் படங்கள் ரிலீஸ்
ajith and vijay
கோலிவுட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு விஜய் மற்றும் அஜித் ஆகியோர்களிடையே பெரும் போட்டி இருந்து வரும் நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் அஜித் நடித்த ‘வீரம்’ மற்றும் விஜய் நடித்த ‘ஜில்லா’ ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகி இரண்டு படங்களும் வெற்றி பெற்றன.

அதற்கு பின்னர் இருவரது படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகாத நிலையில் தற்போது மீண்டும் இருவரது படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

‘அழகிய தமிழ்மகன்’ இயக்குனர் பரதன் இயக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அதே போல் அஜித் வெளிநாட்டு சுற்றுப்பயணம் முடித்து திரும்பி வந்தவுடன் சிறுத்தை சிவா இயக்கவுள்ள அஜித்தின் அடுத்த படமும் ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இந்த இரண்டு படங்களும் 2017ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் வருடங்கள் கழித்து மீண்டும் அஜித்-விஜய் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகவிருப்பதால் அஜித், விஜய்ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ajith and vijay ajith vs vijay ajith and vijay ajith and vijay vijay and ajith vijay and ajith Vijay-Ajith07 ajith and vijay vijay ajith

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *