shadow

அண்ணா சாலையில் மீண்டும் விரிசல். மெட்ரோ ரயில் காரணமா?

சென்னை அண்ணா சாலையில் அவ்வப்போது சாலைகளில் மணல் பொங்கி வருவதும், விரிசல் ஏற்படுவதுமாக இருந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று ஜெமினி பாலம் அருகே திடீரென 10அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டது. இந்த பள்ளத்தில் அரசு பேருந்து மற்றும் கார் ஒன்று சிக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த பள்ளம் ஞாயிறு அன்று இரவோடு இரவாக சரிசெய்யப்பட்டு போக்குவரத்து அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை மீண்டும் அதே இடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் எந்த நேரத்தில் சாலையில் பள்ளம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் அண்ணா சாலை முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பாதை பணிகள் காரணமாகவே இவ்வாறு விரிசல் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இந்த விரிசலை உடனடியாக நேரில் வந்து பார்த்து ஆய்வு செய்த சென்னை மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் கூறியபோது, ‘விரிசல் ஏற்பட்ட இடத்தில் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். ஒரு மணி நேரத்தில் விரிசல் சரி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். விரிசல் ஏற்பட்ட இடத்திற்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்றுவேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply