shadow

அமெரிக்க அதிபர் டிரம்ப் மருமகளின் உடல்நல பாதிப்புக்கு தீவிரவாதிகள் காரணமா?

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களின் மருமகளுக்கு திடீரென உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதற்கு தீவிரவாதிகள் அனுப்பிய ஆந்த்ராக்ஸ் பவுடர் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் மூத்த மகன் டொனால்டு டிரம்ப் ஜூனியர். இவரது மனைவி வெனிஷா. மன்ஹட்டான் நகரில் தனது தாயாருடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலை 10 மணிக்கு ஜூனியர் டிரம்புக்கு தபால் ஒன்று வந்துள்ளது. அந்த தபாலை வெனிஷா பிரித்து பார்த்த போது திடீரென்று, இருமல், மூச்சுத் திணறல் மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு மட்டுமின்றி அவரது அருகில் இருந்த அவரது தாய் மற்றும் வீட்டு வேலையாள்களுக்கும் உடல்நல பாதிப்பு ஏற்பட்டதூ. இதனையடுத்து உடனடியாக பாதிக்கப்பட்ட அனைவரும், நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், டொனால்டு டிரம்ப் ஜூனியர் என்ற பெயரில் வந்த கவரில் வெள்ளை நிற பவுடர் இருந்ததாகவும், அது தீவிரவாதிகள் அனுப்பிய ஆந்த்ராக்ஸ் பவுடராக இருக்கலாம் என்றும் அதனை சுவாசிக்கும் போது தான் இந்த சம்பவம் நிகழ்ந்துவிட்டதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அமெரிக்க புலனாய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply