shadow

Omandurar college

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் 19 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில் ஆண்டுக்கு 2,555 எம்.பி.பி.எஸ். மாணவ–மாணவிகள் சேர்க்கப்படுகிறார்கள். இந்த ஆண்டு புதிதாக ஒரு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உதயமாகிறது.

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இந்த புதிய மருத்துவ கல்லூரி கட்டப்பட்டுள்ளது. 7 தளங்களில், ஒவ்வொரு தளத்திலும் 500 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையும் உருவாக்கப்பட்டுள்ளது.

மருத்துவ கல்லுரிக்கு தேவையான உபகரணங்கள், வகுப்பறைகள், ஆராய்ச்சி கூடங்கள் கட்டும் பணி நிறைவடைந்துள்ளது. மாணவ – மாணவிகள் விடுதி, உள்தங்கும் மருத்துவ அதிகாரிகள் குடியிருப்பு போன்றவை கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அரசின் புதிய மருத்துவ கல்லூரியில் 100 எம்.பி.பி.எஸ். மாணவர்களை சேர்க்கும் வகையில் அடிப்படையான கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஜூன் மாதம் நடைபெறும் மருத்துவ கலந்தாய்வில் இந்த மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கையை நடத்த மருத்துவ கல்வி இயக்ககம் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் அனைத்து முயற்சிகளும் தமிழக சுகாதாரத்துறை எடுத்து வருகிறது. இந்த வருடம் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கிடைத்து கூடுதலாக 100 எம்.பி.பி.எஸ். இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் கீதாலட்சுமி கூறியுள்ளார்.

Leave a Reply