shadow

building
சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் பழைய கட்டடம் ஒன்றை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சுவர் இடிந்து விழுந்து 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே புதிய கட்டிடம் கட்டுவதற்காக 40ஆண்டுகள் பழமையான கட்டிடம் ஒன்றை இடிக்கும் பணி நடந்து வந்தது. இந்த பணி  முறையான அனுமதி பெற்று நேற்று இடிக்கப்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த இடிப்பு பணியில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் கட்டிடத்தின் சுற்றுச்சுவர் ஒன்று எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்து அதன் அருகில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 20 இருசக்கர வாகனங்கள் சேதமாகின. இடிப்புப்பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் யாரும் அந்த இடத்தில் இல்லாததால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்க தேனாம்பேட்டை மற்றும் எழும்பூரிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் சம்ப‌வ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப்பணியை மேற்கொண்டனர். கடந்த ஒரு வாரமாக முறையான அனுமதி பெற்று இடிப்பு பணி நடந்து வருவதாகவும், இந்த இடத்தில்  புதிய குடியிருப்புகள் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் அதன் உரிமையாளர் கூறியுள்ளார்.

Leave a Reply