shadow

WALK

நடை பயிற்சியால் இளைஞர்களைவிட முதியவர்களுக்கு நினைவாற்றலும், அறிவாற்றலும் அதிகரிப்பதாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடை பயிற்சிக்கும், நினைவு மற்றும் அறிவாற்றலுக்கும் உள்ள தொடர்பு குறித்த ஆய்வை மேற்கொண்டனர்.

18 முதல் 31 வயது வரை கொண்ட 29 பேரும், 55 முதல் 82 வயது வரை கொண்ட 31 பேரும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஒவ்வொருவரும் தினமும் எவ்வளது தொலைவு நடக்கிறார், எவ்வளவு நேரம் நடக்கிறார் என்ற விவரம் பதிவு செய்யப்பட்டது.

மேலும், ஒவ்வொருவரின் நினைவுத் திறன், பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது உள்ளிட்ட அறிவுத் திறன் ஆகியவையும் பரிசோதிக்கப்பட்டன.

அதன் மூலம், தினமும் அதிக நேரம் நடை பயிற்சி மேற்கொண்ட முதியவர்களுக்கு நினைவாற்றலும், அறிவாற்றலும் அதிகரிப்பது கண்டறியப்பட்டது.

அதே நேரம், வயதில் இளையவர்கள் அதிக தொலைவு நடை பயிற்சி மேற்கொண்டாலும் அவர்களது நினைவுத் திறன் மற்றும் அறிவாற்றலில் மாற்றம் இல்லை.

இதன்மூலம், வயோதிகத்தால் ஏற்படும் மறதியோடு தொடர்புடைய பல்வேறு நோய்களை, நடை பயிற்சி மூலம் தவிர்க்கலாம் என்று தெரிவதாக இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

“இன்டர்நேஷனல் நியூரோசைக்கலாஜிகல் சொசைட்டி’ அறிவியல் இதழில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply