shadow

ஸ்ரீகாந்த், நீலம் நடித்த ஓம் சாந்தி ஓம் படத்தின் ஆடியோ  வெளியீட்டு விழா நேற்று சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது இந்த விழாவில் பேசிய இயக்குனர் தயா செந்தில்குமார் சாதாரணமாக நம்மூரில் பெண்கள்தான் கற்பழிக்கப்படுவதை கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் சினிமாவில் மட்டும்தான் ஆண்கள் கற்பழிக்கப்படுகிறார் என்று பேசியதால் விழா மேடை பரபரப்பு அடைந்தது.

மேலும் அவர் பேசியதாவது “சினிமாவில் அறிமுக இயக்குநர்கள் மட்டுமல்ல, பல ஹிட் பட இயக்குநர்களுமே ஒவ்வொரு படத்தை இயக்கும் போது பல போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. என்னுடைய முதல்படம் நேஷனல் அவார்டை வாங்கியது, அதைக்கூட வெளியில சொல்ல முடியாது சூழ்நிலை ஆயிடுச்சு.

கிட்டத்தட்ட 14 இயக்குநர்கள்கிட்ட நான் இணை இயக்குநரா வேலை பார்த்திருக்கேன். அதுல 7 புதிய இயக்குநர்களோட இருந்திருக்கேன். 7 பெரிய இயக்குநர்களோட இருந்திருக்கேன். பெரிய இயக்குநர்களுக்கு இருக்கிற அத்தனை டென்ஷன்களும் புதிய இயக்குநர்களுக்கு இருக்கும். நம்மோட வெற்றியை தக்க வைக்கணும்கிற டென்ஷன் பெரிய இயக்குநர்களுக்கு இருக்கும். புதிய இயக்குநர்களுக்கு முதல் படத்தை எப்படியாவது ஜனங்ககிட்ட கொண்டு போய் சேர்த்து எப்படியாவது நானும் இயக்குநராகிடணும்னு வீட்ல இருந்து சொல்லிட்டு வந்துட்டோம்னு, ஜெயிக்காம போகக்கூடாதுன்னுட்டு டென்ஷன் இருக்கும். இதுதான் இங்குள்ள எல்லா டைரக்டர்களுக்கும் ஏற்படுகிற அனுபவம்

ஒரு படம் கஷ்டப்பட்டு போராடி எடுத்து முடிச்சதும் அந்தப்படத்தோட டைரக்டர், தயாரிப்பாளர் எல்லோருமே சிலுவையில் அறையப்படுவார்கள். மறுபடியும் உயிர்த்தெழுவார்கள். மீண்டும் அவர்கள் தங்களை சிலுவையில் அறையைத் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். சந்தோஷத்தையும், துக்கத்தையும் ஒரே மாதிரியாப் பார்த்தா நமக்கு எதுவுமே சிரமம் இல்லை. என்றார் தயா

Leave a Reply