shadow

அருண்விஜய்யின் அடுத்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு

‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் மீண்டும் ரிஎண்ட்ரி ஆன அருண்விஜய் நடித்த ‘குற்றம் 23’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியது. இந்த நிலையில் அருண்விஜய்யின் அடுத்தபட அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.

அருண்விஜய்யின் அடுத்த படத்தை ‘குற்றம் 23’ படத்தை தயாரித்த இந்திரகுமார் மீண்டும் தயாரிக்கவுள்ளார். இந்த படத்தை அருண்விஜய் நடித்த ‘தாக்க தாக்க’ உள்ளிட்ட ஒருசில படங்களை இயக்கிய இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கவுள்ளார்/

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் முதல் தொடங்கவுள்ளதாகவும், இந்த படத்தின் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன் குறித்த அறிவிப்பு மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தயாரிப்பாளர் இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply