shadow

அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாகும் தமிழர்
us supreme court
இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் உலகின் உள்ள பெரிய நிறுவனங்களின் உயரதிகாரிகளாகவும், அரசு உயரதிகாரிகளும் பணியாற்றி வரும் நிலையில் தர்போது அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த ஒருவர் விரைவில் நியமனம் செய்யப்படவுள்லார்.

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன் என்பவர் விரைவில் அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக பதவியேற்கவுள்ளார். இவரது பெயரைப் பரிந்துரைக்க அதிபர் ஒபாமா முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டால் முதல் இந்தியர் என்ற பெருமையை ஸ்ரீனிவாசன் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1960 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்த ஸ்ரீனிவாசன் குடும்பத்தில் கடந்த 50ஆண்டுகளுக்கும் மேல் அமெரிக்காவிலேயே வாழ்ந்து வருகின்றனர். அமெரிக்காவில் பட்டப்படிப்பை முடித்து கீழ்நீதிமன்றத்தில் தனது வாழ்க்கையை தொடங்கிய ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன் தற்போது அந்நாட்டின் 2-வது பெரிய நீதிமன்றமான கொலம்பியா சர்க்யூட் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.

மேலும் அமெரிக்க அதிபர் ஒபாமா நிர்வாகத்தில் முதன்மை துணை சொலிசிட்டர் ஜெனரலாக சிறப்பாக பணியாற்றிய ஸ்ரீனிவாசனின் திறமையை பார்த்த ஒபாமா அவரை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்ய முடிவு செய்யவுள்ளார்.ஒபாமாவில் பதவிக்காலம் இன்னும் ஒருசில மாதங்களில் முடிவடைய உள்ளதால் அதற்குள் இந்த நியமன உத்தரவில் அவர் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Leave a Reply