shadow

இரட்டை கோபுர தாக்குதலுக்கு சவுதி அரேபியா மீது வழக்கு. ஒபாமாவின் அதிரடி முடிவு என்ன?

Obama vetoes bill allowing 9/11 victims to sue saudiகடந்த 2002ஆம் ஆண்டு அமெரிக்கா மட்டுமின்றி உலகையே உலுக்கிய இரட்டை கோபுர தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்கள் சவுதி அரேபியா அரசின் மீது வழக்கு தொடர அனுமதியளித்து, பாராளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த தீர்மானத்தை அமெரிக்க அதிபர் தனது வீட்டோ அதிகாரத்தின் உதவியால் நிராகரித்தார்.

ஒபாமாவின் இந்த முடிவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது என்னவெனில் The Justice Against Sponsors of Terrorism Act (JASTA) எனப்படும் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்களுக்கு எதிரான நீதி என்னும் இந்த சட்டத்தை அனுமதித்தால் அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை சார்ந்த அதிகாரிகள் பிறநாடுகளில் உள்ள நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட வேண்டிய சூழல் நேரிடும் என்றும் இதனால் அமெரிக்கா நீண்டகாலமாக கடைபிடித்துவரும் பிறநாட்டின் இறையாண்மை தொடர்பான சர்வதேச கொள்கைகளுக்கு தீமையாக அமையும் என்பதாலே ஒபாமா இந்த தீர்மானத்தை நிராகரித்ததாக கூறப்படுகிறது.

இத்தகைய சட்டம் ஏற்படுத்தக்கூடிய எதிர்விளைவை எண்ணியும், உலகளவில் நாம் இந்த சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க நேர்ந்தால் நமது நட்பு நாடுகளுடனான உறவுகளில் பாதிப்பு ஏற்படும் என அஞ்சியும் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி, இந்த சட்டத்தை நிராகரித்துள்ளதாக அதிபர் ஒபாமா விளக்கமளித்துள்ளார்.

Leave a Reply