8இராக் நாட்டில் தற்போது உள்நாட்டு போர் உச்சகட்டத்தை அடைந்து வருகிறது. ஈராக் நாட்டின் வடபகுதிகளை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து வரும் ஐ.எஸ்.(ஐஎஸ்ஐஎல்) படை பாக்தாத் நகரை நெருங்கி வருகிறது. முக்கிய எண்ணெய் கிணறுகள் மற்றும் ஈராக் நாட்டின் ஒருசில ராணுவத்தளங்கள் ஆகியவற்றை தீவிரவாதிகள் கைப்பற்றிய நிலையில் தங்களுக்கு அமெரிக்க படைகள் உதவ வேண்டும் என்று இராக் ஒபாமாவிடம் கோரிக்கை விடுத்தது.

ஆனால் இந்த கோரிக்கையை ஒபாமா நிராகரித்துவிட்டார். நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இராக்கில் தீவிரவாதிகளை எதிர்த்து போரிட அமெரிக்கப் படைகளை, அந்நாட்டுக்கு திருப்பி அனுப்ப முடியாது.

இந்தப் பிரச்சினையில் ஆயிரக்கணக்கான படைகளை அனுப்பி, பல உயிர்களையும் வளங்களையும் சேதப்படுத்தி மட்டுமே, இதில் எந்த முடிவையும் கண்டுவிட முடியாது.

இந்த விவகாரத்தில், அமெரிக்காவின் தேசிய நலனும் பாதுகாப்பு அடங்கியுள்ளது. இராக்கில் நடக்கும் சண்டை மனித உரிமைகள் அடிப்படையிலானது. இராக்கில் நடந்துக்கொண்டிருப்பது உள்நாட்டு பிரச்சினை, இதனை இராக்கியர்கள் அனைவரும் இணைந்து முடிவினை காண முயற்சி செய்ய வேண்டும்.

எனினும், நாங்கள் தேவையின் அடிப்படையில் தயார் நிலையில் உள்ளோம். இராக்கில் அதற்கான சூழல் ஏற்பட்டால் நாங்கள் தாக்குதல் நடத்துவோம். பாக்தாத் எல்லையை ஐஎஸ்ஐஎல் நெருங்கினால், நாங்கள் அவர்களை எதிர்ப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவோம்’ என்று கூறினார். ‘

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி அவர்களும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளதால் ஈராக் தீவிரவாதிகள் மகிழ்ச்சி அடைந்து தங்கள் தாக்குதலை இன்னும் அதிகப்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *