பட்ஜெட்டுக்கு அனுமதி அளிக்காததால் கடனில் நாட்களை ஓட்டுகிறது ஒபாமா அரசு. ஆனால், மூன்று நாளாக கதவடைப்பு நீடிக்கும் நிலையில், நாடாளுமன்ற சபாநாயகர் ஜான் போக்னர், குடியரசு கட்சி எம்பிக்களின் பிரதிநிதிகளிடம் தொடர்ந்து பேசி வருகிறார். சபையை கூட்டி, பட்ஜெட் உட்பட நிதி மசோதாக்களுக்கு அனுமதி தரும்படி கேட்டு வருகிறார்.

அளவுக்கு அதிகமாக கடன் வாங்கினால், அதனால் அரசுக்கு தான் கெட்ட பெயர் என்று நினைக்கிறது குடியரசு. அதனால் ஒபாமா எப்படியும் பணிந்து விடுவார் என்பது தான் அவர்கள் திட்டம். ஆனால், ஒபாமாவோ, எவ்வளவு கடன் வாங்கினாலும் கவலைப்படப்போவதில்லை. இதற்கு குடியரசு கட்சி தான் பதில் சொல்ல  வேண்டியிருக்கும். சட்டப்பூர்வ கடமையை கருத்தில் கொண்டு பட்ஜெட் மசோதாக்களை அனுமதிக்க வேண்டும்’ என்று திட்டவட்டமாக கூறி விட்டார். இப்படி இரு தரப்பினரும் தங்கள் நிலையில் இருந்து விட்டுத்தருவதாகவே இல்லை. இதனால் பாதிக்கப்படுவது மாநில கவர்னர்கள் தான். தேசிய பூங்காக்கள், குழந்தைகள், பெண்கள், முதியோர் நல திட்ட நிதி போன்றவற்றுக்கு அவர்கள் தான் அனுமதி தர வேண்டும். ஒபாமா நிர்வாகிகள் நிதி ஒதுக்காத நிலையில் அவர்கள் பாடு திண்டாட்டம் தான்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *