shadow

ஒபாமாவின் கடைசி அதிபர் சுற்றுப்பயணம்.

1அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் முடிவடையவுள்ளது. வரும் ஜனவரி 20முதல் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் பதவியேற்கவுள்ளார்.

இந்நிலையில் அதிபர் பதவியில் இருக்கும் ஒபாமா பதவியில் இருக்கும்போது செய்யும் கடைசி பயணமாக பெரு நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு நடைபெறவுள்ள ஆசிய – பசுபிக் பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டார்

20 முக்கிய நாடுகளின் தலைவர்களின் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் ஒபாமா சீன அதிபர் ஜி ஜின்பிங்கையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக அவர் பெரு அதிபர் பெட்ரோ பாப்லோ குசின்ஸ்கியை சந்தித்து இருநாட்டு நல்லுறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

Leave a Reply