6வது மாடியில் இருந்து மருத்துவர் மீது விழுந்த நர்ஸ்: என்ன ஆனது தெரியுமா?

கொலம்பியா நாட்டில் உள்ள காலி என்ற நகரில் உள்ள மருத்துவமனையில் 6வது மாடியில் இருந்து நர்ஸ் ஒருவர் தவறி கீழே விழுந்தார். அவர் தரைத்தளத்தில் நடந்து சென்று கொண்டிருந்த மருத்துவர் ஒருவர் மீது விழுந்ததால் சிறிய காயங்களுடன் உயிர் தப்பித்தார். ஆனால் அந்த மருத்துவர் படுகாயம் அடைந்து உயிரிழந்தார் என்பது தான் பரிதாபமானது

இதுகுறித்து விசாரணை செய்த போலீசாருக்கு என்ன காரணத்திற்காக இந்தச் சம்பவம் நடந்தது என்பது இதுவரை தெளிவாக தெரியவில்லை. இதுகுறித்து மருத்துவமனை இயக்குனர் ஜுவான் கார்லோஸ் கொரல்ஸ் என்பவர் கூறியபோது, ”என்ன நடந்தது என்று எங்களுக்கு தெரியாது. எங்களுக்கு தெரிந்ததெல்லாம், இது ஒரு வருந்தத்தக்க சம்பவம். இது ஒரு சிரமமான நிலை,” என்று அவர் தெரிவித்தார்.

மரணம் அடைந்த மருத்துவர் உணவகத்திற்குச் செல்லும் வழியில் ஒரு முற்றத்தில் நடந்து கொண்டிருந்தபொது நர்ஸ் அவர் மீது விழுந்ததாகவும், பல சிகிச்சை முயற்சிகள் எடுத்தும், மருத்துவரின் மூளை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதால், அவர் அதிர்ச்சியில் காலமானதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *