shadow

157 மில்லியன் டாலருக்கு விலை போன நிர்வாண ஓவியம்

நியூயார்க் நகரில் நடந்த ஏலம் ஒன்றில் நிர்வாண ஓவியம் ஒன்று 157 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலம் போனது. இத்தாலியை சேர்ந்த ஓவியர் ஒருவர் கடந்த 1917ஆம் ஆண்டு இந்த நிர்வாண ஓவியத்தை வரைந்தார். அவர் வரைந்த காலகட்டத்தில் இந்த ஓவியத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

பாரீஸ் நகரில் நடந்த ஓவிய கண்காட்சியில் இந்த ஓவியர் தனது நிர்வாண ஓவியத்தை பார்வைக்கு வைத்தார். ஆனால் அந்த ஓவியம் கண்காட்சி நடத்துபவர்களால் வெளியேற்றப்பட்டது.

இந்த நிலையில் சரியாக 100 வருடங்கள் கழித்து தற்போது இந்த ஓவியம் ஏலத்திற்கு வந்தது. அமெரிக்க தொழிலதிபர் ஒருவர் இந்த ஓவியத்தை $157 மில்லியன் டாலருக்கு ஏலம் எடுத்தார். இதற்கு முன்னர் பிகாசோ ஓவியம் தான் $140 மில்லியன் டாலர்களுக்கு அதிகபட்சமாக ஏலம் போனது. ஆனால் இந்த ஓவியம் அந்த சாதனையை முறியடித்துள்ளது.

Leave a Reply