என்.டி.டி.வி பிரணாய் ராயின் கூட்டாளி ப.சிதம்பரம். ஹெச்.ராஜா திடுக் தகவல்

தனியார் வங்கி ஒன்றுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படுத்தியதாக என்.டி.டி.வி இணை இயக்குனர் பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா ராய் ஆகியோர் மீது சமீபத்தில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த நிலையில் நேற்று பிரணாய் வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில் சிக்கியது என்ன? என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை

இந்த நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, ‘முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் கூட்டாளி தான் இந்தஎன்டிடிவி பிரணாய் ராய் என்று திடுக்கிடும் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். அதுமட்டுமின்றி 2G ஊழல் விவகாரத்தில் பிரணாய் ராய் முதல் குற்றவாளி, ப.சிதம்பரம் இரண்டாவது குற்றவாளி என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே என்.டி.டி.விக்கு எதிரான ஆதாரங்களை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ள நிலையில் தற்போது ஹெச்.ராஜாவும் பிரணாய் ராய் மீது குற்றச்சாட்டு கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *