shadow

மேகாலயா:2 இடங்களில் வெற்றி பெற்ற பாஜகவின் ஆட்சி: முதல்வராக கான்ராட் சங்மா பதவி ஏற்றார்.

மேகாலயா சட்டமன்றத்திற்கு சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 21 தொகுதிகளை காங்கிரஸ் கட்சியியும், 2 தொகுதிகளில் பாஜகவும் வெற்றி பெற்றன. இந்த மாநிலத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதால் தற்போது, 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக மற்ற கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்கிறது.

இதனையடுத்து, தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கான்ராட் சங்மா இன்று முதல்வராக சர்றுமுன் பதவியேற்றார். மேகாலையா ஆளுநர் கங்கா பிரசாத் அவருக்கு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

பதவியேற்பு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *