உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரரான நோவாக் ஜோகோவிச், தனது நீண்ட நாள் தோழியான ஜெலினா ரிஸ்டிக்கை விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாக அறிவித்துள்ளார். இருவரும் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை டுவிட்டர் இணையதளத்தில் வெளியிட்டுள்ள அவர், ‘எனது வருங்கால மனைவியை சந்தியுங்கள். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நண்பர்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி. திருமணம் விரைவில்’ என்று தகவல் பதிந்துள்ளார். ஜோகோவிச் விளையாடும் போட்டிகளைப் பார்க்க தவறாமல் ஆஜராகிவிடும் ரிஸ்டிக், அவரது அறக்கட்டளையின் இயக்குனராகவும் இருந்து வருகிறார்.

Leave a Reply