shadow

amitabபாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு கடந்த குடியரசு தினத்தில் நாட்டின் இரண்டாவது பெரிய விருதான பத்மபூஷன் விருது வழங்கியுள்ள நிலையில் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி மத்திய அரசு கெளரவிக்க தவறிவிட்டதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இந்நிலையில் மம்தா பானர்ஜியின் கருத்துக்கு பதிலளித்துள்ள அமிதாப்பச்சன், பாரத ரத்னா விருதுக்கு நான் தகுதியற்றவன் என்று தெரிவித்துள்ளார்.

இன்று அமிதாப்பச்சன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது, ““மம்தா அவர்களே, அத்தகைய (பாரத ரத்னா விருது) அங்கீகாரம் பெறுவதற்கு எனக்கு தகுதி இல்லை. நாடு எனக்கு தந்திருப்பதை மிகவும் கவுரவமானது என அடக்கத்துடன் கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அமிதாப்பச்சனை வைத்து மம்தா அரசியல் செய்ய நினைத்ததாகவும், அதற்கு அமிதாப் சரியான பதிலடி கொடுத்துள்ளதாகவும் மேற்குவங்க பாஜக தரப்பில் இருந்து கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply