shadow

நியூயார்க் டு லண்டன்: ஐந்தேகால் மணி நேரத்தில் பறந்த விமானம்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு செல்ல சாதாரணமாக 6 மணி நேரத்திற்கு மேல் விமானம் பயணம் செய்யும். ஆனால் நார்வே நாட்டின் நார்வேயன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ‘போயிங் 787-9 டிரீம் லைனர்’ என்ற விமான இந்த தூரத்தை வெறும் 5 மணி நேரம் 13 நிமிடத்தில் கடந்து சாதனை செய்துள்ளது.

இதுகுறித்து நார்வேயன் ஏர்லைன்ஸ் விமானத்தின் பைலட் கூறியபோது, ‘தட்ப வெப்பநிலை, காற்றின் வேகதன்மை ஆகியவை சாதகமாக இருந்ததால் 53 நிமிடத்துக்கு முன்னதாகவே செல்ல முடிந்ததாகவும், காற்றின் வேகத்தை நாங்கள் முன்கூட்டியே கணித்திருந்தால் இன்னும் அதிக வேகத்தில் சென்றடைந்திருக்க முடியும் என்றும் கூறினார்.

இதற்கு முன்னர் கடந்த 2015ஆம் ஆண்டு இதே தூரத்தை 5 மணி 16 நிமிடத்தில் சென்றடைந்ததே சாதனை படைத்ததாக கருதப்பட்ட நிலையில் தற்போது அந்த சாதனை 3 நிமிட வித்தியாசத்தில் உடைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply