shadow

ஒரே ஏவுகணையில் அமெரிக்கா காலி: வடகொரியா கொக்கரிப்பு

அமெரிக்காவின் முழு நிலப்பரப்பும் தனது ஏவுகணை இலக்கில் வந்துள்ளதாகவும், ஒரே ஒரு ஏவுகணை அமெரிக்காவை அழிக்க போதும் என்றும் வடகொரியா கூறியுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐநா பொருளாதார தடை விதித்த போதிலும் அடுக்கடுக்காக ஏவுகணை சோதனை செய்து வரும் வடகொரியா தற்போது மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை சோதனை செய்துள்ளது.

இன்று அதிகாலை வடகொரியா நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை ஒன்றை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளதாக வடகொரியாவின் அண்டை நாடான தென்கொரியா தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் வடகொரியா இதுகுறித்து கூறியபோது, ‘அமெரிக்காவின் முழு நிலப்பரப்பும் எங்கள் ஏவுகணை இலக்கில் வந்துள்ளது என்பதை பெருமையுடன் பிரகடனம் செய்கிறோம். வடகொரியா அணுசக்தியை நிறைவு செய்யும் பெரும் வரலாற்று சாதனையை நிகழ்த்தி உள்ளது என கூறியுள்ளது.

Leave a Reply