shadow

ஜப்பான் கடலில் ஏவப்பட்ட வடகொரியாவின் ஏவுகணை. தென்கிழக்கு ஆசியாவில் பதட்டம்

அமெரிக்கா உள்பட உலகநாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் தென்கொரியா அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் அணு ஆயுத சோதனை நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஜப்பான் கடல் பகுதியில் வடகொரியா ஏவுகணையை செலுத்தியுள்ளதாகவும் இதனால் தென்கிழக்கு ஆசியாவில் பதட்டநிலை ஏற்பட்டிருப்பதாகவும் அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறியபோது, ‘வடகொரியா தொடர்ந்து நடத்தி வரும் அணு ஆயுத சோதனைகளின் அபாயத்தைத் தடுக்க தொடர்ந்து பரிசீலித்து வருகிறோம். இந்நிலையில் சில மணி நேரங்களுக்கு முன்னர் ஜப்பான் கடலில் வடகொரியா ஏவுகணை செலுத்தியது” என்று கூறியுள்ளனர்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு நடைபெற உள்ள நிலையில் வடகொரியா ஏவுகணையை செலுத்தியுள்ளது பெரும் முக்கியத்துவம் பெறுகிறது.

ஜப்பான் கடலில் வடகொரியா நடத்தியுள்ள ஏவுகணை செலுத்தியது குறித்து பசிபிக் கடல் பிராந்தியத்தை கண்காணித்து வரும் அமெரிக்க கடற்படை அதிகாரிகள், “வடகொரியா புதன்கிழமையன்று காலை 11.42 மணியளவில் ஜப்பான் கடலில் ஏவுகணை செலுத்தியது. இதுகுறித்து கண்காணித்து வருகிறோம்” என்று கூறியுள்ளனர்.

முன்னதாக வடகொரியாவின் அணுசக்தித் திட்டங்களுக்கு எதிராக சீனா நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அமெரிக்கா தனியாக எதிர்கொள்ளும் என்று அமெரிக்க அதிபர் டர்ம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *