shadow

வடகொரியா ஹைட்ரஜன் குண்டு சோதனை. அவசரமாக கூடுகிறது ஐ.நா சபை
north korea
அமெரிக்கா மட்டுமின்றி உலக நாடுகளையும் அவ்வபோது தனது அதிரடி நடவடிக்கையின் மூலம் அச்சுறுத்தி வரும் வடகொரியா  அணுகுண்டைவிட அதிக சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் வெடிகுண்டை வெற்றிகரமாக சோதித்ததாக திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.

இந்தச் சோதனையின் காரணமாக வட கொரிய அணு ஆயுத சோதனைக் கூடம் அமைந்துள்ள பகுதியில் செயற்கையான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி அமெரிக்க புவியியல் ஆய்வு மையமும், 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தனது இணையதளத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.

வட கொரியா ஏற்கனவே மூன்று முறை அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டு ஐ.நா.வின் அதிருப்தியை சம்பாதித்துள்ள நிலையில் தற்போது இந்த சோதனையை நடத்தியிருப்பதால் சர்வதேச நெருக்கடிக்குள்ளாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே வடகொரியா ஹைட்ரஜன் வெடிகுண்டை சோதனை செய்தது குறித்து ஆலோசனை செய்ய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசரக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. இதனை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் ஐ.நா. அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கூட்டத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 5 நிரந்தர மற்றும் 10 தற்காலிக உறுப்பினர்கள் உட்பட 15 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மட்டும் பங்கேற்கின்றனர். இந்த அவசரக் கூட்டம் மூடிய கதவுகளுக்குள் ரகசியமாக நடைபெறும் என தெரிகிறது.

Chennai Today News: North Korea Announces That It Has Detonated First Hydrogen Bomb

Leave a Reply