shadow

kamalகண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் வெற்றிக்கு பிறகு அதே படக்குழுவினர் மீண்டும் இணைந்த திரைபடம் “வாலிப ராஜா”. இந்த திரைபடத்தில் சேது, விசாகா சிங், சந்தானம், தேவதர்ஷினி,விடிவி கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை சாய் கோகுல் ரமணத் இயக்கியுள்ளார்.

‘வாலிப ராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை தேவி தியேட்டரில் நடந்தது. இதில் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசினார். அவருடைய பேச்சு சில சர்ச்சைகளை ஏற்படுத்தியிருப்பதாக கோலிவுட் மத்தியில் பேசப்படுகிறது.

கமல்ஹாசன் இந்தவிழாவில் பேசியபோது இருவிதமான சர்ச்சைக்கருத்துக்களை பேசியுள்ளதாக கூறப்படுகிறது. ‘நான் சினிமாவுக்கு வராமல் இருந்திருந்தால் என்னுடைய தந்தையை போல வக்கீலாக மாறி, பல குற்றவாளிகளை நிரபராதியாக மாற்றியிருப்பேன் என்று கூறினார். இந்த கருத்தால் வழக்கறிஞர்களிடையே ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கறிஞர் தொழில் என்பது நீதியை காப்பாற்றக்கூடிய ஒரு புனிதமான தொழில்.குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக்கொடுத்து நீதியை நிலைநாட்டு இந்த தொழிலை கமல் இழிவு படுத்தும் வகையில் பேசியதாக வழக்கறிஞர்களிடையே பெரும் அதிருப்தி நிலவி வருகிறது.

மேலும் தமிழ்நாடு அரசு உள்பட இந்தியாவின் எந்த ஒரு அரசாங்கமும் சினிமாவுக்கு பெரிதாக எந்த உதவியும் செய்யவில்லை என்று கமல் கூறினார். விஸ்வரூபம் பிரச்சனையின்போது ஏற்பட்ட கடுமையான மனக்கசப்பை மனதில் வைத்துக்கொண்டுதான் கமல் இவ்வாறு பேசியதாக கூறப்படுகிறது. தமிழக ஆளுங்கட்சியை குறிப்பாக ஜெயலலிதா அரசை தாக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இந்த விழாவை கமல் பயன்படுத்திக்கொண்டதாக ஆளுங்கட்சியினர் கமல் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/1nJjrG6″ standard=”//www.youtube.com/v/gN21egjiH4I?fs=1″ vars=”ytid=gN21egjiH4I&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep5622″ /]

Leave a Reply