shadow

nonvegஇந்தியாவில் பாலியல் வன்முறைகள் பெருகுவதற்கு முக்கிய காரணம் அசைவ உணவும், செல்போன்களுமே ஆகும் என பீகார் கலாச்சாரத் துறை அமைச்சர் வினய் பிகாரி அவர்கள் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை கூறியுள்ளார்.

நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் மாநிலத்தில் கலை, கலாச்சார மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் வினய் பிகாரி. இவர் ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று பீகாரில் நடந்த விழா ஒன்றில் பேசிய அமைச்சரி பிகாரி, “இளைஞர்கள் ஆபாச படங்களை பார்ப்பதற்காக அதிகமாக செல்போன்களை பயன்படுத்துகின்றனர்கள் .இளைஞர்கள் அறிவை வளர்த்துக்கொள்ளவும், தகவல்களை தெரிந்துகொள்ளவும் தங்களது செல்போன்களில் இணைய தள சேவையை பயன்படுத்துவதாக பொய் சொல்லிக்கொண்டு  ஆபாச படங்களை பார்த்து கெட்டு குட்டிச்சுவராய் போகின்றனர். இதுதான் பாலியல் பலாத்காரத்திற்கு முக்கியகாரணம்.

மேலும் அசைவ உணவும் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரத்திற்கு முக்கிய காரணமாக திகழ்கிறது. கோழிக்கறி, மீன் போன்ற அசைவ உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்பவர்கள் பாலியல் பலாத்காரம் செய்ய தூண்டப்படுகிறார்கள்” என்று பேசியுள்ளார்.

அமைச்சரின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சு காரணமாக பீகாரில் அவருக்கு கடும் கண்டங்கள் எழுந்துள்ளது. லல்லு பிரசாத் யாதவ் கட்சியினர் அமைச்சர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

Leave a Reply