shadow

‘சீனா மொபைல்’ நிறுவனத்துடன் ரூ.10,271 கோடிக்கு ஒப்பந்தம். மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் நோக்கியா
nokia
மொபைல் சேவையை முதன்முதலாக இந்தியா உள்பட பல நாடுகளுக்கு அறிமுகப்படுத்திய நோக்கியா நிறுவனம் தற்போது பின் தங்கிய நிலையில் இருந்தாலும் மீண்டும் உற்சாகத்துடன் சீன நிறுவனத்துடன் இணைந்து விஸ்வரூபம் எடுத்துள்ளது.

வயர்லெஸ் நெட்வொர்க்கிங், நெட்வொர்க் பிளானிங் மற்றும் 5ஜி சேவை ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி வரும் நோக்கியா இந்த சேவைகளுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள், பராமரிப்பு வசதிகள், மென்பொருள் சேவைகள் ஆகியவற்றை வழங்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.

தற்போது உலகின் மாபெரும் தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான ‘சீனா மொபைல்’ நிறுவனத்துடன் இணைந்து வயர்லெஸ் கனெக்டிவிட்டி மற்றும் கிளவுட் நெட்வொர்க்கை உருவாக்க ரூ.10,271 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தத்தில் நோக்கியா நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி, பல்வேறு ரேடியோ தொழில்நுட்பங்களை ஒரே நேரத்தில் ஒரே பேஸ் ஸ்டேஷனில் இருந்து பயன்படுத்தவும், 5G போன்ற அதிவேக இண்டர்நெட்டில் சப்போர்ட் ஆகும் வகையிலும் கிளவுட் நெட்வொர்க்கை சீன நிறுவனத்திற்கு நோக்கியா உருவாக்கிக் கொடுக்கும்.

Chennai Today News: Nokia to build China Mobile’s cloud network

Leave a Reply