shadow

மிஸ் டீன் அழகி போட்டி: இந்திய அழகி சிருஷ்டி பட்டம் வென்றார்

மிஸ் வேர்ல்ட், மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி போன்று ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது டீன் ஏஜ் அழகிகளுக்கான அதாவது 15 முதல் 19 வயது அழகிகளுகான உலக அழகி போட்டி. இந்த ஆண்டு இந்த போட்டி மத்திய அமெரிக்காவில் உள்ள நிகாராகுவாவின் மனாகுவாவில் நடைபெற்றது. இந்த போட்டிக்கு பல நாடுகளில் இருந்து வந்த அழகிகள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற அழகிகள் 25 பேர் இறுதி சுற்று போட்டிக்கு தகுதி பெற்றனர். இதில் இந்திய அழகி சிருஷ்டி கவுரும் இடம் பெற்றிருந்தார்.

போட்டியில் உடல் அழகு, தனித்திறன் உள்ளிட்ட பிரிவுகளில் முதலிடம் பிடித்து இளம் வயது மிஸ் யுனிவர்ஸ்-ஆக மகுடம் சூடினார் சிருஷ்டி கவுர். மேலும் சிருஷ்டி கவுர் சிறந்த ஆடை அலங்கார போட்டியிலும் முதல் பரிசு பெற்றார். இந்திய தேசிய பறவையான மயில் போன்று நேர்த்தியான ஆடையை அணிந்து இருந்தார் சிருஷ்டி கவுர்.

சிருஷ்டி கவுருக்கு அடுத்த இடங்களை கனடாவை சேர்ந்த சமன்தா பியரியும், மெக்சிகோவை சேர்ந்த டிராவாவும் பெற்றனர். மேலும், பிரபலமானவர்கள் பிரிவில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஜிரெல்லி ஆஸ்டின் மற்றும் கவர்ச்சிப் பிரிவில் கோஸ்டாரிகாவை சேர்ந்த நிக்கோல் ஓபான்டோ ஆகியோர் பரிசுகளைத் தட்டி சென்றனர்.

Leave a Reply