திமுக தலைவர்களை கேள்வி கேட்க எனக்கு முழு உரிமை உண்டு. அழகிரி
azhagiri
திமுக-காங்கிரஸ் கூட்டணி குறித்து காட்டமாக கருத்து கூறிய அழகிரிக்கு பதிலடியாக திமுக தலைவர் கருணாநிதி, ‘அழகிரியின் கருத்துக்களை தொண்டர்கள் அலட்சியப்படுத்த வேண்டும் என்று கூறினார். இந்நிலையில் இந்த கருத்துக்கு பதிலளித்துள்ள மு.க.அழகிரி, ‘கட்சியைப் பற்றி கவலைப்படவும், தவறாக செல்லும் போது கேள்வி கேட்கவும் எனக்கு முழு உரிமை உள்ளது’ என்று கூறியுள்ளார்.

மு.க.அழகிரி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மேலும் கூறியிருப்பதாவது: , திமுக பற்றி கருத்து சொல்ல நீ யார் என, என்னை யாரும் கேட்க முடியாது. ஏனெனில், இந்த கட்சிக்காக மற்றவர்களை விட நான் கூடுதலாக உழைத்துள்ளேன். பலமுறை சிறை சென்றுள்ளேன். நான் தவறு செய்துள்ளேன் என்று சொன்னால், அது கட்சிக்காக நடந்த தவறாகவே இருக்கும்.

இப்படித்தான், கட்சி மீது நான் பற்றுதலோடும், விசுவாசத்தோடும் இருந்திருக்கிறேன். அதனால் கட்சியைப்பற்றி கவலைப்படவும், தவறாக செல்லும் போது கேள்வி கேட்கவும் எனக்கு உரிமை உள்ளது” என்று கூறியுள்ளார்.

தேர்தல் நெருங்கு சமயத்தில் திமுக தலைவரும் மு.க.அழகிரியும் மாறி மாறி ஒருவருக்கொருவர் கருத்து மோதல் செய்வது கட்சியினை பலவீனப்படுத்தும் என உண்மையான திமுக தொண்டர்கள் தங்கள் கவலையினை தெரிவித்துள்ளனர்.

Chennai Today News: Nobody has a right question me. M.K.Azhagiri

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *