மருத்துவம், வேதியியல், இயற்பியல் துறைகளை தொடர்ந்து இலக்கியத்துக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த பரிசு, 82 வயதான ஆலிஸ் மன்ரோ என்ற கனடா நாட்டு பெண்மணிக்கு கிடைத்துள்ளது. சிறுகதை எழுதுவதில் திறமைசாலியான ஆலிஸ், இலக்கியதுக்கான நோபல் பரிசு பெறும் 13வது பெண். மனிதனின் இயல்புகள் குறித்து ஆலிஸ் எழுதிய சிறுகதைகளுக்காக இந்த பரிசு கிடைத்துள்ளது. கனடா நாட்டின் சார்பில் நோபல் பரிசு பெறும் முதல் பெண் இவர்தான்.

Leave a Reply