shadow

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது. பள்ளிக்கல்வித்துறையின் எச்சரிக்கை
students
வெயிலின் கொடுமை அதிகமாக உள்ள கோடை விடுமுறையில் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மாணவர்கள் உள்பட அனைத்து மாணவர்களுக்கும் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதை பள்ளிகள் தவிர்க்க வேண்டும் என்றும் கோடை விடுமுறையை மாணவர்களுக்கு முழுமையாக வழங்க வேண்டும் என்று நாம் ஏற்கனவே ஒரு கட்டுரையில் தெரிவித்திருந்தோம். ஏற்கனவே இந்த கட்டுரையை படிக்காதவர்கள் ( கோடை விடுமுறை சிறப்பு வகுப்புகள் தேவைதானா? ஒரு அலசல் ) இந்த லிங்கிற்கு சென்று படிக்கவும். இந்நிலையில் நம்மை போன்ற பல்வேறு தரப்பினர்களின் கோரிக்கையை ஏற்று பள்ளிக்கல்வித்துறை இன்று கோடை விடுமுறையில் எந்த சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாவது: ‘எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்புகளை அந்தந்த வருடம் பள்ளிக்கூட நாட்களில் மட்டுமே நடத்த வேண்டும். அரசு பள்ளிகளில் அவ்வாறுதான் நடத்தி வருகிறார்கள். 2016-2017-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதற்காக பாடங்களை பள்ளிக்கூட விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளாக நடத்த பல தனியார் பள்ளிகள் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. அவ்வாறு எந்த பள்ளிகளும் வகுப்புகளை நடத்தக்கூடாது. அவ்வாறு வகுப்புகளை நடத்தினால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

Leave a Reply