கொரோனா வைரஸ் எதிரொலி: பள்ளிகள், அலுவலகங்கள் மூடப்படுகிறதா? துணை முதல்வர் விளக்கம்

உலகம் முழுவதும் மனித இனத்தையே அழித்து வரும் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக இந்தியாவில் பரவி வரும் நிலையில் இந்தியாவில் உள்ள மத்திய அரசு மற்றும் மாநில அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது

ஏற்கனவே கேரளாவில் 1 முதல் 7 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு செய்யப்பட்டதாகவும் முன்கூட்டியே விடுமுறை அளிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின

புதுவையில் உள்ள ஒரு சில இடங்களிலும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் இன்று முதல் பள்ளிகள், அலுவலகங்கள் மூடப்படுவதாக செய்திகள் பரவி உள்ளன. இது குறித்து துணை முதல்வர் அஸ்வத் நாராயணன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்தபோது ’இன்றுமுதல் பள்ளிகள், அலுவலகங்கள் மூடப்படுவதாக பரவி வரும் செய்தி முற்றிலும் தவறானது என்றும் அலுவலகங்கள் மூடப்படுவது அல்லது தொடர்ந்து நடத்துவதை அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் முடிவு எடுக்கலாம் என்றும் மேலும் வீட்டில் இருந்து பணி செய்யும் வகையில் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணி செய்வது குறித்த முடிவையும் மாவட்ட நிர்வாகமே எடுக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா வைரஸ் வைரஸுக்கு எதிராக அரசு பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக யாரும் பயப்பட தேவை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Leave a Reply