ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி உள்பட 7 பேர்களையும் விடுதலை செய்ய இருப்பதாக இன்று காலை சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதுகுறித்து மத்திய அரசுக்கு பரிந்துரை கடிதம் உடனடியாக அனுப்பப்படும் என்று கூறினார்.

இதையடுத்து இன்று மாலை டெல்லியில் பேட்டியளித்த சுஷில்குமார் ஷிண்டே ‘தமிழக அரசின் கடிதம் இதுவரை மத்திய அரசுக்கு கிடைக்கவில்லை. கடிதம் கிடைத்தவுடன் சட்ட வல்லுனர்களிடம் ஆலோசித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்று கூறினார்.

மத்திய அரசு 3 நாட்களுக்குள் பதில் அளிக்காவிட்டால் தமிழக அரசே தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி நளினி உள்ளிட்ட 7 பேர்களையும் விடுதலை செய்யும் என கூறியது குறித்து கேட்டதற்கு சுஷில்குமார் ஷிண்டே பதிலளிக்க மறுத்துவிட்டார். தமிழக அரசின் கடிதம் நாளை மத்திய அரசுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply