அதிர்ச்சி தகவல்

சமீபத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதை அடுத்து காலாண்டு மற்றும் அரையாண்டு பொதுத்தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது

இந்த நிலையில் திடீரென காலாண்டு அரையாண்டு விடைத்தாள்கள் பெற்றோரிடம் வழங்கப்பட்டு விட்டதாகவும் அந்த விடைத்தாள்கள் தற்போது பெற்றோரிடம் இல்லை என தகவல் வந்துள்ளதாகவும் தனியார் பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் நந்தகுமார் என்பவர் திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார்

இதனை அடுத்து பள்ளிகளில் உள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் முடிவுகளை அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்வுத்துறை இயக்குனருக்கு அவர் கூறியுள்ளார்

காலாண்டு அரையாண்டு விடைத்தாள்கள் அடிப்படையில் முழு ஆண்டு தேர்வு மதிப்பெண்கள் வழங்குவது தனியார் பள்ளிகள் பணம் வாங்கிக்கொண்டு முறைகேடு செய்வதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அந்த விடைத்தாள்களை பள்ளிக்கல்வி இயக்குனரகம் கேட்டபோது இதற்கு தனியார் பள்ளியின் செயலாளர் நந்தகுமார் கூறியுள்ள பதில் திடுக்கிட வைத்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply