Rajnath Singh3PTIஅருணாச்சலப் பிரதேசத்தில் ரூ.40 ஆயிரம் கோடி செலவில் புதிய சாலைகள் அமைக்கும் இந்தியாவின் முயற்சிக்கு சீனா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. மேலும் இரு நாட்டு நல்லுறவுக்கு இந்த சாலை அமைக்கும் பணி இடையூறாக இருக்கும் என சீனா எச்சரித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவுக்கு எந்த நாடும் எச்சரிக்கை விடுக்க முடியாது என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

நேற்று ஹரியானா மாநிலத்தில் உள்ள மனேசர் என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உலகளவில் வலிமை மிக்க நாடுகளில் ஒன்றாக இந்தியா வளர்ந்து விட்டது. எனவே, எல்லைப் பிரச்னை விவகாரங்கள் தொடர்பாக, இந்தியாவுடன் அமர்ந்து சீனா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அருணாச்சலப் பிரதேசத்தின் சங்-லாங் மாவட்டத்தில் புதிய சாலை அமைக்க இந்தியா மேற்கொண்ட முயற்சிக்கு சீனா தெரிவித்துள்ள எதிர்ப்பு தேவையில்லாதது.

இந்தியாவை சீனா உள்ளிட்ட எந்த நாடும் இனி எச்சரிக்க முடியாது. பக்கத்து நாடுகளின் நட்பை பேணிவரும் இந்தியா, அதே நேரத்தில் தனது உரிமையை எந்த காரணத்தை முன்னிட்டும் விட்டுக்கொடுக்காது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *