சூர்யா படத்தில் நடிக்கவில்லை. ஹன்சிகா விளக்கம்

Hansika-Motwani-beauty-hd-wallpaperசூர்யா தற்போது பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘எஸ்3’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளார். இந்நிலையில் அவர் நடிக்கவிருக்கும் அடுத்த படமான ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ஆரம்பகட்ட பணிகளில் இயக்குனர் விக்னேஷ் சிவன் பிசியாக உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் நாயகி யார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. முதலில் நயன்தாரா நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் அவருடைய சம்பளம் கட்டுபடியாகாது என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறிவிட்டதை அடுத்து பின்னர் கீர்த்திசுரேஷ் நடிப்பார் என்றும் கூறப்பட்டது. ஆனால் திடீரேன தற்போது இந்த படத்தில் ஹன்சிகா நடிப்பார் என்ற செய்தி இணையதளங்களில் பரவி வருகிறது.

ஆனால் இந்த செய்தியை ஹன்சிகா தனது டுவிட்டரில் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடிக்க என்னிடம் யாரும் அணுகவில்லை. இது முழுக்க முழுக்க வதந்தியே. எனவே இந்த வதந்தியை உடனே நிறுத்தி கொள்ள வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *