shadow

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது சாத்தியமில்லை: சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு அறிக்கை தாக்கல்

தமிழகத்திற்கு 4 டி.எம்.சி தண்ணீரை உடனே திறந்துவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்த நிலையில், தமிழகத்திற்கு தற்போது தண்ணீர் திறந்துவிடும் சாத்தியம் இல்லை என கூறி கர்நாடக அரசு இன்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சுப்ரீம் கோர்ட்டில் இன்று கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட அளவை விட 16.66 டி.எம்.சி தண்ணீர் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 116.74 டி.எம்.சி திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது, கர்நாடத்தின் தேவைக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. இதனால், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது சாத்தியமில்லை என கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

நாளை சுப்ரீம் கோர்ட்டில் காவிரி வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாளைய விசாரணையின்போது சுப்ரீம் கோர்ட் கர்நாடக அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply