shadow

ரூ.10 லட்சத்திற்கு மேல் வருமானம் இருந்தால் எரிவாயு மானியம் இல்லை. மத்திய அரசு அதிரடி

gas cylinderஒரு குடும்பத்தின் உறுப்பினர்களின் மொத்த வருட வருமானம் ரூ.10 லட்சத்திற்கு மேல் இருந்தால் மத்திய அரசு வழங்கும் எரிவாயு மானியம் ரத்துச் செய்யப்படும் என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அதிரடியாக அறிவித்துள்ளர். இந்த நடைமுறை வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதால் தற்போது மானியம் பெற்று வரும் பெரும்பாலானோர் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

குடும்ப தலைவருக்கோ, தலைவிக்கோ அல்லது குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கோ ஆண்டு வருமானம் 10 லட்சத்திற்கு மேல் இருந்தால் அவர்கள், தங்களுக்கு வழங்கப்படும் எரிவாயு மானியத்தை தாங்களாகவே  விட்டுக்  கொடுத்துவிட வேண்டும். இல்லையென்றால் அவர்களின் மானியத்தை மத்திய அரசு ரத்து செய்யும். இதற்கான உத்தரவை பெட்ரோலியத்துறை அறிவித்துள்ளது.

இத்தகவலை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள அமைச்சர் பிரதான், மானியம் மிகவும் தேவைப்படும் ஏழைகளுக்கு மட்டுமே மானியம் வழங்கப்பட வேண்டும் என்ற அரசின் தற்போதைய கொள்கை என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Chennai Today News: No more subsidised cooking gas if annual income is above Rs.10 lakh

Leave a Reply