பெட்ரோல் போட இனி காசு தேவையில்லை: கொரோனாவால் திடீர் மாற்றம்

கொரோனா வைரஸ் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக அன்றாட வாழ்க்கைமுறையே மாறி வரும் நிலையில் தற்போது பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் பெட்ரோல் போட வரும் வாடிக்கையாளர்களிடம் பணம் வாங்க மறுத்து வருகின்றனர். அதற்கு பதிலாக டிஜிட்டலில் பணம் வழங்குமாறு அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்

இந்தியா முழுவதிலும் உள்ள சுமார் 5000க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகளில் வாகன ஓட்டிகளிடம் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பணம் வாங்க மறுப்பதாகவும் அதற்கு பதிலாக டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, மொபைல் ஆப் மூலம் டிஜிட்டல் முறையில் பணம் வசூலிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது

ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் செயலிகள் மூலம் பணம் செலுத்தி பெட்ரோல், டீசல் பெற வேண்டிய நிலை வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply