அரசை சொல்லி எந்த குற்றமும் இல்லை: உயிரை கொடுத்து ஒருவாரம் வீட்டில் முடங்கியது வேஸ்ட்டா?

கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து இந்தியா முழுவதும் மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. ஆனால் இந்த ஊரடங்கு உத்தரவை பலர் மதிக்கவில்லை

தேவையில்லாத காரணத்திற்காக வெளியே சென்று வைரசை பரப்பி வருகின்றனர் காய்கறி வாங்கவும் மட்டன் சிக்கன் வாங்கவும் வெளியே சென்று வருவதால் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது ஒரு வாரம் மட்டன் சிக்கன் சாப்பிடாமல் இருக்க முடியாதா என்ற கேள்வியும் எழுகிறது

அதுமட்டுமன்றி மத வழிபாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு திரும்பியவர்களால் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் இருப்பதை அறிந்தும் அதனை வெளியே சொல்லாமல் ஒளிந்து வாழ்பவர்கள் இந்த சமூகத்தின் விரோதிகளாக பார்க்கப்படுகிறார்கள்.

அரசு என்னதான் தீவிர நடவடிக்கை எடுத்தாலும் பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லை என்றால் இந்த கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தோல்வியில் தான் முடியும் என்ற சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்

Leave a Reply