கல்லூரிகள் இன்று விடுமுறையா? வதந்தி என அண்ணா பல்கலை விளக்கம்

திமுக தலைவர் கருணாநிதி கடந்த இரண்டு நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து அவ்வப்போது மருத்துவமனை நிர்வாகம் செய்திக்குறிப்பை வெளியிட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்றிரவு கருணாநிதியின் உடல்நிலையில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டதை அடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக்கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டதால் சமூகவலைத்தளங்களில் வதந்திகள் பரவியது

இந்த வதந்திக்கு அண்ணா பல்கலைக்கழகம் தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதில் உறுப்பு கல்லூரிகளுக்கு இன்று (30-07-2018) விடுமுறை என பரவிய தகவல் தவறானது என்றும் அண்ணா பல்கலைக்கழகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *