shadow

சென்னை-சேலம் பசுமை சாலைக்காக மலைகள் குடையப்படுமா? தமிழிசை விளக்கம்

சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலைக்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த சாலைக்காக மலைகள் எதுவும் குடையப்படாது என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

நேற்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை, டெல்லி சென்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை சந்தித்து சென்னை – சேலம் 8 வழிச்சாலை குறித்து ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

தமிழிசை, பசுமை வழிச் சாலை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தினேன். போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், இந்த திட்டம் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. பசுமை வழிச்சாலை அமைக்க எந்தவொரு மலையும் பாதிக்கப்படாது. எங்கேயும் மலைகள் குடையப்படாது என்று தமிழிசை உறுதியளித்தார்.

Leave a Reply