shadow

கிராபிக்ஸ் இல்லாத ராஜமெளலி படமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிரபல இயக்குனர் ராஜமெளலி படம் என்றாலே பிரமாண்டமும், தத்ரூபமான கிராபிக்ஸ் காட்சிகளும் தான் நினைவுக்கு வரும். குறிப்பாக பாகுபலி மற்றும் விரைவில் வெளியாகவுள்ள ‘பாகுபலி 2’ ஆகிய படங்களில் உலக தரத்தில் அவருடைய டீம் அமைத்துள்ள கிராபிக்ஸை பாராட்ட வார்த்தைகளே இல்லை.

இந்நிலையில் தன்னுடைய அடுத்தபடத்தில் கிராபிக்ஸ் காட்சிகளே இல்லை என்றும் முழுக்க முழுக்க தத்ரூபமான இயல்பான காட்சிகளே இருக்கும் என்று ராஜமெளலி கூறியுள்ளார். இந்த தகவல் ராஜமெளலியின் ரசிகர்களுக்கு ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது.

ராஜமெளலியின் அடுத்த படத்தில் கிராபிக்ஸ் இல்லையென்றால் கண்டிப்பாக இந்த படம் சரித்திர படமாக இருக்காது என்றும் தற்போதைய சமூக பிரச்சனைகலை அலசும் ஒரு படமாக இருக்கும் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply