திமுகவுடன் கூட்டணி இல்லை. தேமுதிகவை அடுத்து காங்கிரஸ் அதிரடி.

evksஅதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஏற்கனவே பலமுறை அறிவித்துள்ள நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திமுகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்துள்ளார். இதனால் வரும் தேர்தலில் திமுக தனித்து விடப்படும் அபாயம் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

ஏற்கனவே பாமக தனித்து தேர்தலை சந்திக்கவுள்ளதாக அறிவித்து அன்புமணியை முதல்வர் வேட்பாளராகவும் அறிவித்துவிட்டது. மேலும் மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில் சிறிய கட்சிகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்துவிட்டது. இந்நிலையில் திமுகவுக்கு இருந்த இரண்டே வாய்ப்பு தேமுதிக மற்றும் காங்கிரஸ் மட்டுமே

ஆனால் தற்போது தேமுதிகவும், காங்கிரஸ் கட்சியும் திமுகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்துவிட்டது. இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், இந்த தேர்தலில் முடிவுகளை பற்றி கவலைப்படாமல் தனித்து நிற்க முடிவு செய்துள்ளதாகவும், மதச்சார்பற்ற சக்திகளுக்கு எதிராக ஒன்றுசேர வேண்டிய நிலை ஏற்பட்டால், கட்சி மேலிடத்தின் ஆலோசனைப்படி கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Chennai Today News: No election alliance with DMK said EVKS Ilangovan

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *