shadow

6 லட்சம் லிட்டர் ரத்தம் காலாவதி. பொறுப்பில்லாமல் நடந்த ஒரு அதிர்ச்சி தகவல்

இரத்ததானம் செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை நாடு முழுவதும் ஏற்படுத்தி பொதுமக்களை ரத்த தானம் செய்வதற்கு சமூக ஆர்வலர்கள் உயிரை கொடுத்து உழைத்து வரும் நிலையில் சரியாக ஒருங்கிணைப்பு இல்லாததால், கடந்த ஐந்து ஆண்டுகளில் தானமாக பெறப்பட்ட சுமார் 6 லட்சம் லிட்டர் ரத்தத்தை ரத்த வங்கிகள் வீணாக்கியுள்ளதாக வந்த செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரத்த வங்கிகளுக்கும், மருத்துவமனைகளுக்கு இடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லாததாலும், ரத்தத்தை நீண்ட நாட்கள் பாதுகாத்து வைக்கும் பராமரிப்பு இல்லாததாலும்
கடந்த ஐந்தாண்டுகளில் 28 லட்சம் யூனிட் ரத்தம் அதாவது சுமார் 6 லட்சம் லிட்டர் ரத்தம் காலாவதியாகியுள்ளது. இந்த ரத்தத்தைக் கொண்டு, 53 தண்ணீர் லாரிகளை நிரப்ப முடியும் என்பது ஒரு அதிர்ச்சி செய்தி ஆகும்

இந்த ரத்தத்தை சரியான ஒருங்கிணைப்புடன் பயன்படுத்தியிருந்தால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும் என்றும், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்ஹ்ட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Reply